செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: 4-வது இடத்திற்கு சரிந்தது இந்தியா, தொடர்ந்து முதலிடத்தில் ஆஸ்திரேலியா

Published On 2016-05-04 10:42 GMT   |   Update On 2016-05-04 10:42 GMT
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் இந்திய அணி 4-வது இடத்திற்கு சரிந்துள்ளது. ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
துபாய்:

சர்வதேச கிரிக்கெட் சங்கம் ஒருநாள் போட்டித் தொடருக்கான ஆண்டு நிறைவு தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 34 போட்டிகளில் விளையாடியுள்ள ஆஸ்திரேலியா அணி, 124 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்திலேயே உள்ளது.

அதற்கு அடுத்தபடியாக, 41 போட்டிகளில் விளையாடியுள்ள நியூசிலாந்து அணி 113 புள்ளிகளுடன் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி 112 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்திய அணி 109 புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கு சரிந்துள்ளது. இந்தியாவிற்கு அடுத்து இலங்கை(104), இங்கிலாந்து(103), வங்கதேசம்(98) அணிகள் முறையே 5, 6, 7-வது இடங்களை பிடித்துள்ளன. வெஸ்ட் இண்டீஸ் அணி 88 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும், பாகிஸ்தான் அணி 87 புள்ளிகளுடன் 9-வது இடத்திலும் உள்ளது.

முன்னதாக, நேற்று டெஸ்ட் போட்டிக்கான தரவரிசை பட்டியல் வெளியிட்டது. அதிலும் ஆஸ்திரேலியா அணி முதலிடத்தை பிடித்திருந்தது. இந்திய அணி 2-வது இடத்தில் இருந்தது.

Similar News