செய்திகள்

வார்னர்-வில்லியம்சன் ஜோடிக்கு கோலி பாராட்டு

Published On 2016-05-02 02:35 GMT   |   Update On 2016-05-02 02:35 GMT
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு ஐதராபாத்தில் நடந்த ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சாய்த்தது.
ஐதராபாத், மே.2-

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு ஐதராபாத்தில் நடந்த ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சாய்த்தது. இதில் டேவிட் வார்னர் (9 பவுண்டரி, 5 சிக்சருடன் 92 ரன்), வில்லியம்சன் (50 ரன்) ஆகியோரின் அதிரடி வேட்டையுடன் ஐதராபாத் அணி 194 ரன்கள் குவிக்க, பதிலுக்கு ஆடிய பெங்களூரு அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 179 ரன்களே சேர்க்க முடிந்தது.

பெங்களூரு கேப்டன் விராட் கோலி கூறும் போது, ‘ஷிகர் தவான் (11 ரன்) சீக்கிரம் வெளியேறிய போதிலும் வார்னர், ஐதராபாத் அணியை சரிவில் இருந்து மீட்டு விட்டார். அவரது ஆட்டம் அற்புதம். அவருக்கு வில்லியம்சன் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். வார்னர் ஆட்டம் இழந்ததும், 175 ரன்னுக்குள் கட்டுப்படுத்தி விடலாம் என்று நினைத்தேன். 194 ரன்கள் என்பது கொஞ்சம் அதிகமான ஸ்கோர் தான். பந்து வீச்சு வியூகத்தை களத்தில் செயல்படுத்துவதில் மீண்டும் ஒரு முறை சொதப்பி இருக்கிறோம். பேட்டிங் குறித்து கவலையில்லை. ஆனால் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமாகும்’ என்றார்.

விராட் கோலியிடம் (381 ரன்) இருந்து ஆரஞ்சு நிற தொப்பியை தட்டிப்பறித்த டேவிட் வார்னர் 5 அரைசதம் உள்பட 386 ரன்கள் குவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News