இந்தியா
மழை

சூறைக்காற்றுடன் திருப்பதியில் 2 மணிநேரம் பலத்த மழை

Update: 2022-05-05 06:07 GMT
திருப்பதியில் நேற்று 69,603 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 30,434 முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.84 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
திருப்பதி:

திருப்பதியில் நேற்று பகலில் கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து சூறைக்காற்றுடன் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. திருச்சானூர், காளஹஸ்தி உள்ளிட்ட இடங்களிலும் பலத்த மழை பதிவானது.

அக்னி நட்சத்திரம் தொடங்கிய தினத்தில் பெய்த பலத்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியடைந்துள்ளது.

பலத்த மழையால் திருமலையில் தரிசனத்துக்குச் சென்ற பக்தர்கள் சிரமப்பட்டனர்.  சுமார் 2 மணிநேரம் பெய்த பலத்த மழையால் பல இடங்களில் மழை நீர் தேங்கியது. நீரை தேவஸ்தான ஊழியர்கள் உடனடியாக செயல்பட்டு, அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

திருப்பதியில் நேற்று 69,603 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 30,434 முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.84 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
Tags:    

Similar News