இந்தியா
கேரளாவில் இன்று முதல் பஸ் கட்டணம் உயர்வு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி: கேரளாவில் இன்று முதல் பஸ் கட்டணம் உயர்வு

Update: 2022-04-01 02:16 GMT
ஆட்டோக்களில் குறைந்த கட்டணம் ரூ.25-ல் இருந்து ரூ.30 ஆகவும், டாக்சிக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.175-ல் இருந்து ரூ.200 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம் :

கேரள போக்குவரத்து துறை மந்திரி ஆன்றனி ராஜு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கேரளாவில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பஸ் கட்டணம் உயர்கிறது. அரசு பஸ் உள்பட அனைத்து பஸ்களின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.8-ல் இருந்து ரூ.10 ஆக உயர்வு செய்யப்பட்டு உள்ளது. அதே போல் பஸ்களில் கி.மீ. கட்டணம் 90 பைசாவில் இருந்து, ரூ.1 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

ஆட்டோக்களில் குறைந்த கட்டணம் ரூ.25-ல் இருந்து ரூ.30 ஆகவும், டாக்சிக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.175-ல் இருந்து ரூ.200 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News