இந்தியா
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

பகத்சிங் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை பொது விடுமுறை- பஞ்சாப் அரசு அறிவிப்பு

Published On 2022-03-22 09:20 GMT   |   Update On 2022-03-22 11:02 GMT
பஞ்சாப் மாநில மக்கள் கட்கர் காலனுக்குச் சென்று பகத் சிங்கிற்கு மரியாதை செலுத்த அனுமதிக்கப்படும் என்று பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.
பஞ்சாப் சட்டசபை தேர்தலில் அபாரமாக வெற்றிப் பெற்று காங்கிரஸ், பாஜகவை ஓரங்கட்டி ஆம் ஆத்மி முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. ஆம் ஆத்மி சார்பில் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட பகவந்த் மான் வெற்றிப் பெற்று முதல்வராக பொறுப்பேற்றார். கடந்த 16-ம் தேதி சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் பூர்வீக கிராமமான கட்கர் கலனில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாண்ட விழாவில் பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் பதவியேற்றார்.

அப்போது வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றில், தனது பதவியேற்பு விழாவில் கலந்துக் கொள்ள மாநில மக்களுக்கு பகவந்த் மான் அழைப்பு விடுத்தார். விழாவில் ஆண்கள் மஞ்சள் நிற தலைப்பாகையும், பெண்கள் மஞ்சள் நிற துப்பட்டாவும் அணியுமாறு வலியுறுத்தினார். மஞ்சள் நிறம் புரட்சி மற்றும் தியாக உணர்வைக் குறிக்கிறது என்றும், பகத் சிங்குடன் அடையாளப்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் பகத் சிங்கிற்கும், அம்பேத்கருக்கும் சிலை நிறுவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், பகத் சிங்கின் நினைவு தினத்தையொட்டி நாளை பஞ்சாப் மாநிலத்திற்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு, பஞ்சாப் மாநில மக்கள் கட்கர் காலனுக்குச் சென்று பகத் சிங்கிற்கு மரியாதை செலுத்த அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. நீட் தேர்வில் கிராமப்புற மாணவர்கள் பற்றிய விவரங்கள் இல்லை- தேசிய தேர்வு முகமை
Tags:    

Similar News