இந்தியா
தேசிய மகளிர் ஆணையம்

கட்சி மாறி வாக்களித்த மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன் - மகளிர் ஆணையம் கண்டனம்

Published On 2022-03-21 10:54 GMT   |   Update On 2022-03-21 13:21 GMT
உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கட்சி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.
புதுடெல்லி:

உத்தர பிரதேசம் மாநிலத்தில் 7 கட்டமாக நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வின் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான கட்சி அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சியை மீண்டும் தக்கவைத்தது.

இந்நிலையில், உ.பி.யின் பெரெய்லியைச் சேர்ந்த முஸ்லிம் பெண்மணி ஒருவரை கொடூரமாக தாக்கிய கணவர் மீது வழக்குப்பதியும் படி தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்த ஆணையத்தின் தலைவி ரேகா சர்மா டிஜிபிக்கு எழுதியுள்ள கடிதத்தில், முஸ்லிம் பெண்மணி ஒருவர் கட்சி மாறி வாக்களித்ததற்காக அவரது கணவரால் கொடூரமாக தாக்கப்பட்டு உள்ளார். மேலும் அந்தப் பெண்ணுக்கு விவாகரத்து மிரட்டலும் விடுத்துள்ளார். எனவே, அவர் மீது எப்.ஐஆர். பதிவுசெய்து விசாரிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

கட்சி மாறி வாக்களித்ததற்காக மனைவியை கணவன் கொடூரமாக தாக்கிய விவகாரம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News