இந்தியா
வாக்குப்பதிவு

உ.பி. நான்காம் கட்ட தேர்தல் - 61.5 சதவீதம் வாக்குப்பதிவு

Published On 2022-02-23 19:06 GMT   |   Update On 2022-02-23 19:06 GMT
உத்தர பிரதேசத்தில் நேற்று நடந்த 4-ம் கட்ட தேர்தலில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தனது வாக்கை பதிவுசெய்தார்.
லக்னோ:

உத்தர பிரதேசம் மாநிலத்தில் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மூன்று கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்தன.

இதற்கிடையே, நேற்று மொத்தம் 59 தொகுதிகளில் 4-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. லக்னோவில் உள்ள வாக்குச்சாவடியில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தனது வாக்கை பதிவு செய்தார். அதன்பின் பேசிய அவர், பா.ஜ.க. மீண்டும் வரலாறு படைப்பதோடு மட்டுமல்லாமல் கடந்த முறையை விட அதிக இடங்கள் பிடிக்க வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.

லக்னோ, ரேபரேலி, லக்கிம்பூர் உள்ளிட்ட தொகுதிகளில் நடைபெற்ற இந்த 4-வது கட்ட தேர்தலில் மொத்தம் 624 வேட்பாளர்கள் களம் கண்டனர். வாக்குப்பதிவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் நான்காம் கட்ட தேர்தலில் ஒட்டுமொத்தமாக 61.5 சதவீத வாக்குகள் பதிவானது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News