இந்தியா
கச்சா பாமாயிலுக்கு விவசாய வரி குறைப்பு

கச்சா பாமாயிலுக்கான விவசாய வரி குறைப்பு - மத்திய அரசு நடவடிக்கை

Published On 2022-02-14 18:07 GMT   |   Update On 2022-02-14 18:07 GMT
அதிகரித்து வரும் சமையல் எண்ணெய்களின் விலையைக் குறைக்க இந்த நடவடிக்கை உதவும் என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
புதுடெல்லி:

உலகளவில் சமையல் எண்ணெய்களின் விலைகள் அதிகரிப்பால், உள்நாட்டு சமையல் எண்ணெய்களின் விலைகள் மேலும் உயர்வதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

நுகர்வோருக்கு மேலும் நிவாரணம் அளிக்கும் வகையில், கச்சா
பாமாயிலுக்கான விவசாய வரியை  7.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது.

விவசாய வரி குறைக்கப்பட்ட பிறகு, கச்சா பாமாயில் மற்றும் சுத்தி கரிக்கப்பட்ட பாமாயிலுக்கும் இடையேயான இறக்குமதி வரி இடைவெளி, 8.25% ஆக அதிகரித்துள்ளது. இது உள்நாட்டு சுத்திகரிப்புத் தொழிலுக்கு ஊக்கம் அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கச்சா சோயாபீன் எண்ணெய் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் மீதான தற்போதைய அடிப்படை இறக்குமதி வரி செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்படுகிறது.

அதன்படி சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மீதான இறக்குமதி வரி 12.5% ​​ஆகவும், சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன் எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் மீதான வரி 17.5% ஆகவும்  செப்டம்பர் 30 வரை அமலில் இருக்கும். 

அதிகரித்து வரும் சமையல் எண்ணெய்களின் விலையைக் குறைக்க இந்த நடவடிக்கை உதவும் என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.


Tags:    

Similar News