இந்தியா
10 ரூபாய் நாணயம்

10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்க கூடாது- மத்திய மந்திரி பேச்சு

Published On 2022-02-09 05:33 GMT   |   Update On 2022-02-09 05:37 GMT
ரிசர்வ் வங்கியால் 10 ரூபாய் நாணயம் பல்வேறு அளவுகள், கருத்து வடிவமைப்புகளில் அச்சிடப்பட்டு புழக்கத்துக்கு வெளியிடப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

10 ரூபாய் நாணயங்களில் போலிகள் நடமாடுவதாகவும், இதனால் கடைகளிலும், சில இடங்களிலும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இந்த நிலையில் பாராளுமன்ற மேல்-சபையில் அ.தி.மு.க. எம்.பி. விஜயகுமார் ஒரு கேள்வி எழுப்பினார். அதில், “நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 10 ரூபாய் நாணயங்கள் போலியானவை என கருதி ஏற்றுக் கொள்ள மறுக்கப்படுகிறதா?” என்றார்.

இதற்கு பதில் அளித்து மத்திய நிதித் துறை இணை மந்திரி பங்கஜ் சவுதாரி கூறியதாவது:-

ரிசர்வ் வங்கியால் 10 ரூபாய் நாணயம் பல்வேறு அளவுகள், கருத்து வடிவமைப்புகளில் அச்சிடப்பட்டு புழக்கத்துக்கு வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து பணப் பரிவர்த்தனைகளிலும் சட்டப்பூர்வமான தொகையை செலுத்தும் போது இந்த நாணயத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

10 ரூபாய் நாணயங்களை ஏற்றுக் கொள்ள மறுத்தது தொடர்பான எந்த புகார்களும் பதிவு செய்யப்பட வில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News