இந்தியா
உச்சநீதி மன்றம்

மகாராஷ்டிராவில் 12 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

Published On 2022-01-28 05:55 GMT   |   Update On 2022-01-28 07:13 GMT
எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

மகாராஷ்டிரா சட்டசபையில் இருந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் பா.ஜ.க.வைச் சேர்ந்த 12 எம்.எல்.ஏக்கள் ஓராண்டிற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சட்டசபையில் சபாநாயகர் இல்லாத நிலையில் தற்காலிக சபாநாயகரான ஜாதவ் கூட்டத்தை நடத்திய நிலையில் பாஜக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். 

இதையடுத்து பராக் அலவானி, ராம் சத்புட், சஞ்சய் குட், ஆஷிஷ் ஷெலார், அபிமன்யு பவார், கிரிஷ் மகாஜன், அதுல் பட்கல்கர், ஷிரிஷ் பிம்பிள், ஜெய்குமார் ராவல், யோகேஷ் சாகர், நாராயண் குச்சே, மற்றும் கீர்த்திகுமார் பகடி ஆகிய 12 பேரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.  இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. 

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், 12 எம்எல்ஏக்கள் இடைநீக்க உத்தரவை ரத்து செய்தது. சஸ்பெண்ட் நடவடிக்கை அரசியலமைப்பிற்கு எதிரானது மற்றும் நியாயமற்றது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
Tags:    

Similar News