கொரோனா கட்டுப்பாடுகளையொட்டி மக்களவை மற்றும் மாநிலங்களவை தனித் தனி நேரங்களில் தலா ஐந்து மணி நேரம் செயல்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் - இரண்டு அவைகளும் வெவ்வேறு நேரங்களில் செயல்படும் என தகவல்
பதிவு: ஜனவரி 25, 2022 03:37 IST
மாற்றம்: ஜனவரி 25, 2022 06:29 IST
பாராளுமன்றம்
புதுடெல்லி :
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடுகிறது. முன்னதாக ஜனவரி 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் பாராளுமன்றத்தில் உரையாற்றுவார். பட்ஜெட் கூட்டத் தொடரின் போது கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக மக்களவை மற்றும் மாநிலங்களவை தனித் தனி நேரங்களில் செயல்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி மாநிலங்களவை காலை 9 மணிக்கும், மக்களவை மாலை 4 மணிக்கும் கூடும் என்று கூறப்படுகிறது. தலா ஐந்து மணி நேரம் இரு அவைகளும் இயங்கும் என்று தெரிகிறது. இந்த புதிய நெறிமுறை பிப்ரவரி 2 முதல் நடைமுறைக்கு வரும். கூட்டத்தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 11ஆம் தேதி முடிவடையும் வரை இது அமல்படுத்தப் படுகிறது.
பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வு மார்ச் 14 முதல் ஏப்ரல் 8 வரை நடைபெறும். கொரோனா பரவல் அதிகரிப்பை கருத்தில் கொண்டு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பார்வையாளர்கள் பகுதியும் உறுப்பினர்கள் அமரும் வகையில் பயன்படுத்தப்படும் என்று மக்களவைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related Tags :