இந்தியா
பள்ளி வகுப்பறை

மேற்கு வங்காளத்தில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு - நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் மூடல்

Published On 2022-01-02 10:24 GMT   |   Update On 2022-01-02 10:24 GMT
அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் மட்டுமே செயல்படும் என அரசு அறிவித்துள்ளது.
கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதாலும், ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாகவும், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், ஸ்பாக்கள், சலூன்கள், அழகு நிலையங்கள் நாளை முதல் மூடப்படுகின்றன. உயிரியல் பூங்காக்கள், பொழுதுபோக்கு பூங்காக்களும் நாளை முதல் மூடப்படும். அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும், இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அனுமதி அளிக்கப்படும்.

அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் மட்டுமே செயல்படும். புறநகர் ரெயில்கள் நாளை முதல் 50% பயணிகளுடன் இரவு 7 மணி வரை மட்டும் இயக்கப்படும்.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News