இந்தியா
விமாணப்படை குரூப் கேப்டன் வருண் சிங்

கேப்டன் வருண் சிங் உடல் இன்று முழு ராணுவ மரியாதையுடன் தகனம்

Published On 2021-12-17 03:28 GMT   |   Update On 2021-12-17 09:05 GMT
குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த விமானப்படை குரூப் கேப்டன் வருண் சிங் உடல் இன்று போபாலில் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பயணம் செய்த 14 பேரில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட விமானப்படை குரூப் கேப்டன் வருண் சிங் பெங்களூரு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால், கடந்த 15-ம் தேதி வருண் சிங் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். அவரது உடல் நேற்று முன்தினம் யேலஹங்கா விமானப்படை நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் வருண்சிங்கின் சொந்த ஊரான மத்தியபிரதேச தலைநகர் போபாலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு வருண்சிங் உடலுக்கு அம்மாநில முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், வருண் சிங்கின் உடல் இன்று மாலை முழுராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்.. எனது மகள் ஷீனா போரா உயிருடன் இருக்கிறார் - இந்திராணி சி.பி.ஐ.க்கு பரபரப்பு கடிதம்
Tags:    

Similar News