செய்திகள்
உச்சநீதிமன்றம்

விவசாயிகள் போராட்டம் நடத்த உரிமை உண்டு: ஆனால் காலவரையின்றி சாலைகளை மறிக்க முடியாது- உச்சநீதிமன்றம்

Published On 2021-10-21 08:26 GMT   |   Update On 2021-10-21 08:26 GMT
‘‘விவசாயிகள் போராட்டம் நடத்த உரிமை உள்ளது. ஆனால், காலவரையின்றி சாலைகளை மறிக்க இயலாது’’ என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேச மாநிலங்கள் மற்றும் டெல்லி எல்லையில் தொடர் போராட்டம் நடத்தினார்கள். இதனால் போக்குவரத்து மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. பொதுமக்கள், வாகனங்கள் சாலைகளை பயன்படுத்த முடியாது நிலை ஏற்பட்டது.

தற்போது சில இடங்களில் சாலைகளில் உட்கார்ந்து போராடுகின்றனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனால் சாலைகளில் போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு மீதான விசாரணையின்போது ‘‘விவசாயிகள் போராட்டம் நடத்த உரிமை உள்ளது. ஆனால், காலவரையின்றி சாலைகளை மறிக்க இயலாது’’ என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மேலும், விவசாய சங்கங்கள் இதுகுறித்து பதில் அளிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றம், அடுத்த விசாரணையை டிசம்பர் 3-ந்தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
Tags:    

Similar News