செய்திகள்
இந்திர பிரதாப் திவாரி

போலி மதிப்பெண் சான்றிதழ் வழக்கில் உ.பி. பா.ஜனதா எம்.எல்.ஏ.-வுக்கு ஐந்தாண்டு சிறை

Published On 2021-10-18 16:49 GMT   |   Update On 2021-10-18 16:49 GMT
கல்லூரியில் சேரும்போது போலி மதிப்பெண்ணை பயன்படுத்திய வழக்கில் பா.ஜனதா எம்.எல்.ஏ.-வுக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள கோசைகஞ்ச் தொகுதியில் இருந்து பா.ஜனதா கட்சி சார்பில் எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இந்திர பிரதாப் திவாரி என்ற கப்பு திவாரி. படிக்கும் காலத்தில் கல்லூரியில் சேரும்போது போலி மதிப்பெண் சான்றிதழ் வழங்கி சேர்ந்துள்ளார்.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் 28 வருடத்திற்கு முன்பு நடைபெற்றது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கு எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவில் அவர் போலி மதிப்பெண் சான்றிதழ் வழங்கியது உறுதியானது. இதனால் இந்திர பிரதாப் திவாரிக்கு நீதிமன்றம் ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

தீர்ப்பு வழங்கும்போது இந்திய பிரதாப் திவாரி நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். அவரை போலீசார் கைது செய்து ஜெயலில் அடைத்தனர்.
Tags:    

Similar News