செய்திகள்
கோப்புப்படம்

இமாச்சல பிரதேசத்தில் நான்கு பேர் உயிரை பறித்த செல்பி மோகம்

Published On 2021-09-21 14:08 GMT   |   Update On 2021-09-21 14:08 GMT
அழகான இடங்களை கண்டால் செல்போன் உடன் செல்லும் நபர்கள் செல்பி மோகத்தால் உயிரை இழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவது துரதிருஷ்டவசமானது.
மனிதனுடைய வாழ்க்கையை உள்ளங்கைக்குள் அடக்கியது செல்போன் என்றால் அது மிகையாகாது. உலகின் எந்தவொரு தகவல்களையும் நொடிப்பொழிதில் வழங்குகிறது. செல்போன் முதலில் பேசுவதற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஸ்மார்ட் போன் அறிமுகமான பின், குட்டி கம்ப்யூட்டராக செயல்பட்டு வருகிறது.

செல்போனில் வீடியோ, போட்டோ எடுக்கும் வசதி இருப்பதால் அதை பயன்படுத்துபவர்கள், கண்டிராத பிரமிப்பான இடங்களை தங்களது செல்போனுக்குள் வளைத்துப்போட்டுக்கொள்வார்கள்.

ஆனால் சமீப காலமாக செல்பி என்ற மோகம் செல்போன் பயன்படுத்துபவர்களிடம் அதிகரித்து வருகிறது. அவர்கள் தங்களை மற்றவர்களிடம் பெருமையாக காட்டிக் கொள்வதற்காக ஆபத்தான இடங்களில் நின்று செல்பி எடுக்கிறார்கள்.

மலையின் உச்சிப்பகுதி, நீர்வீழ்ச்சி, வெள்ளம் கரைபுரண்டு ஓடும் ஆற்றங்கரையோரம் என ஆபத்தான இடத்தில் நின்று செல்பி எடுக்கிறார்கள். அப்போது கவனக்குறைவால் உயிரிழப்பு அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.

அதேபோல்தான் செல்பி மோகம் இமாச்சல பிரதேசத்தில் இன்று நான்கு பேர் உயிரை பறித்துள்ளது. அம்மாநிலத்தின் குலு மாவட்டம் பஹாங் என்ற இடத்தில் செல்பி எடுத்தபோது நீரில் மூழ்கி அம்மா, மகன் மற்றும் இரு சுற்றுலாப் பயணிகள் என நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
Tags:    

Similar News