செய்திகள்
ஸ்பைஸ்ஜெட் விமானம்

திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஸ்பைஸ்ஜெட் ஊழியர்கள்

Published On 2021-09-03 13:15 GMT   |   Update On 2021-09-03 13:15 GMT
ஊழியர்களுடன் ஸ்பைஸ்ஜெட் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் சம்பள பாக்கியை பெற்றுத் தருவதாக உறுதி அளித்துள்ளனர்.
புதுடெல்லி:

ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவன ஊழியர்கள், தங்களுக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கியை வழங்கும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக முன்னாள் பைலட ஒருவர் விமான போக்குவரத்து இயக்குனரகத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், விமான நிறுவனம் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாகவும், சம்பள குறைப்பு காரணமாக விமானிகள் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், டெல்லி விமான நிலையத்தில் பணிபுரியும் ஸ்பைஸ்ஜெட் ஊழியர்கள் சுமார் 150 பேர் சம்பள பாக்கியை வழங்க வலியுறுத்தி இன்று திடீரென வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. பின்னர் அவர்களுடன் ஸ்பைஸ்ஜெட் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் சம்பள பாக்கியை பெற்றுத் தருவதாக உறுதி அளித்துள்ளனர். அதன்பின்னர் ஊழியர்கள் பணிக்கு திரும்பினர்.

டெல்லி விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களில் ஒரு பகுதியினருடன் இருந்த பிரச்சினை தீர்க்கப்பட்டு, ஊழியர்கள் பணிக்கு திரும்பியதாகவும்,  விமானப் போக்குவரத்து சீராக நடைபெறுவதாகவும் ஸ்பைஸ்ஜெட் விளக்கம் அளித்துள்ளது.
Tags:    

Similar News