செய்திகள்
அரியானா அதிகாரி

விவசாயிகளின் மண்டையை உடையுங்க... அடாவடியாக பேசிய அதிகாரி மீது நடவடிக்கை பாய்கிறது

Published On 2021-08-29 12:43 GMT   |   Update On 2021-08-29 12:43 GMT
பாஜக தலைவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்திய விவகாரம் மாநிலம் முழுவதும் விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி:

அரியானா மாநிலத்தில் பாஜக தலைவர்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பேராட்டங்களின்போது சில சமயம் வன்முறையும் ஏற்படுகிறது. நேற்று கர்னால் மாவட்டத்தில் பாஜக தலைவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது ஒருபுறமிருக்க, பாஜக தலைவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் விவசாயிகளின் மண்டையை உடைக்கும்படி போலீசாரிடம் கர்னால் துணைக் கோட்ட ஆட்சியர் ஆயுஷ் சின்கா உத்தரவிட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் போலீசாரிடம் பேசுவது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. பாஜக எம்பி வருண் காந்தி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அந்த அதிகாரிக்கு கண்டனம் தெரிவித்தனர். 

இந்நிலையில், விவசாயிகளின் மண்டையை உடைக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா இன்று தெரிவித்தார்.

“ஐஏஎஸ் அதிகாரியின் வீடியோ வைரலாகியுள்ளது. அந்த அதிகாரி பின்னர் விளக்கம் அளித்தார். அதில், இரண்டு நாட்களாக தூங்காமல் வேலை செய்ததால் இப்படி நடந்துகொண்டதாக ஒரு விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார். ஆனால் விவசாயிகள் 365 நாட்கள் தூங்கவில்லை என்பதை அவர் தெரிந்துகொள்ளவேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என சவுதாலா கூறினார்.

Tags:    

Similar News