செய்திகள்
ரவிக்குமார் தாஹியா

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம்... ரவிக்குமாருக்கு குவியும் வாழ்த்துகள்

Published On 2021-08-05 13:31 GMT   |   Update On 2021-08-05 13:31 GMT
மல்யுத்த வீரர் ரவிக்குமார் வருங்காலங்களில் மேலும் பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்கள் என மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
புதுடெல்லி:

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், ஆடவருக்கான மல்யுத்த பிரிவில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாகூர் மற்றும் பல்வேறு தலைவர்கள், விளையாட்டு பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களிலும் ரவிக்குமாரின் சாதனையை கொண்டாடுகின்றனர்.

ரரவிக்குமாரின் போராட்ட குணம், உறுதி மிகச்சிறப்பானவை என்றும், அவரது சாதனைகளில் இந்தியா பெருமை கொள்வதாகவும் பிரதமர் மோடி கூறி உள்ளார்.

‘அருமை, ரவி தாஹியா. வெள்ளிப் பதக்கம் வென்ற தங்களுக்கு வாழ்த்துக்கள்’ என ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.



மல்யுத்தத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற ரவிக்குமார் தாஹியாவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், வருங்காலங்களில் மேலும் பல வெற்றிகளை குவிக்க ரவிக்குமாருக்கு வாழ்த்துக்கள் என மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News