செய்திகள்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

சட்டசபையில் 2-ந்தேதி கருணாநிதி படத்திறப்பு- ஜனாதிபதிக்கு அழைப்பு

Published On 2021-07-31 08:31 GMT   |   Update On 2021-07-31 08:31 GMT
தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழாவில் தலைமை விருந்தினராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்று கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.
புதுடெல்லி:

தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழாவும், சட்டசபை அரங்கில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்திறப்பு விழாவும் வருகிற 2-ந் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

விழாவில் தலைமை விருந்தினராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்று கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

இந்த விழாவுக்கான அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு விட்டது. முக்கிய பிரமுகர்களுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார்கள்.

ஜனாதிபதிக்கு அழைப்பிதழ் வழங்க சபாநாயகர் அப்பாவு நேற்று மாலை டெல்லி சென்றிருந்தார்.



இன்று காலை 11.30 மணியளவில் ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து,  அழைப்பிதழ் வழங்கி சட்டசபை விழாவுக்கு வந்து சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்தார்.

இதையும் படியுங்கள்...மத்திய பிரதேசத்தில் ஜெயில் சுவர் இடிந்து 22 கைதிகள் காயம்
Tags:    

Similar News