செய்திகள்
மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்

இந்தியாவில் உளவுபார்த்தல் சாத்தியமில்லை -பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி விளக்கம்

Published On 2021-07-19 14:08 GMT   |   Update On 2021-07-19 14:08 GMT
பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தி இந்திய அரசு யாரையும் உளவு பார்க்கவில்லை என தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
புதுடெல்லி:

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், பிரகலாத் படேல் ஆகியோரின் செல்போன் உரையாடல்கள் பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தி ஒட்டுகேட்கப்பட்டதாக தகவல் வெளியானது. 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கரின் செல்போன்களும் ஒட்டு கேட்கப்பட்டதாக செய்தி வெளியானது.

இது தொடர்பாக மக்களவையில் இன்று தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்தார். அப்போது, பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தி இந்திய அரசு யாரையும் உளவு பார்க்கவில்லை என்று கூறினார்.

‘எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நன்றாகத் தெரியும், இந்தியாவில் சட்டவிரோதமாக உளவுபார்த்தல் என்பது சாத்தியமல்ல, இந்தியாவில் அங்கீகாரமற்ற கண்காணிப்பு ஒருபோதும் நடைபெறாது. பாராளுமன்றம் கூடுவதற்கு ஒருநாள் முன்னதாக பரபரப்பான செய்திகள் வெளியாவது தற்செயலானது அல்ல’ என மத்திய மந்திரி குறிப்பிட்டார்.
Tags:    

Similar News