செய்திகள்
வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள்

அரியானாவில் பாதிப்பு குறைந்தது -கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு

Published On 2021-07-18 14:53 GMT   |   Update On 2021-07-18 14:53 GMT
அரியானா மாநிலத்தில் சினிமா தியேட்டர்களை திறக்கவும், கோவில்களை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சண்டிகர்:

அரியானா மாநிலத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை உணவகங்களும், இரவு 11 மணி வரை 50 சதவீத இருக்கை வசதிகளுடன் கிளப்களும், கோல்ஃப் மைதானங்களின் பார்கள் இரவு 11 மணி வரையிலும் செயல்படலாம். 50 சதவீத பயிற்சியாளர்களுடன் உடற்பயிற்சி நிலையங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறக்க செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. ஐம்பது சதவீத இருக்கைகளுடன் உணவகங்கள் மற்றும் மதுக்கடைகள் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை திறக்க அனுமதிக்கப்படுகின்றன.



திருமணங்கள், இறுதி சடங்குகளில் 100 பேர் பங்கேற்கலாம். திறந்தவெளியில் நடைபெறும் நிகழ்வுகளில் 200 பேர் வரை பங்கேற்கலாம். 

சினிமா தியேட்டர்ளை திறக்கலாம். 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே ரசிகர்களை அனுமதிக்க வேண்டும். வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கலாம். ஒரே சமயத்தில் 50 நபர்களுக்கு மேல் இருக்கக்கூடாது.
Tags:    

Similar News