செய்திகள்
13 அடி நீள கருநாக பாம்புடன் வாலிபர் சூரிய கீர்த்தி

கிராமத்தில் புகுந்த 13 அடி நீள கருநாக பாம்பை துணிச்சலுடன் பிடித்த வாலிபர்

Published On 2021-07-09 10:27 GMT   |   Update On 2021-07-09 10:27 GMT
கர்நாடகாவில் உள்ள கிராமத்தில் புகுந்த கருநாக பாம்பு காவிரி ஆறு பிறப்பிடமான பாகமண்டலா பகுதிக்கு கொண்டு சென்று அங்குள்ள ஏரி அருகே காட்டில் விடப்பட்டது.

நகரி:

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம், மூர்நாடு கிராமத்தில் 13 அடி நீள கருநாகப்பாம்பு ஒன்று புகுந்தது. இதை பார்த்த பொதுமக்கள் பாம்பை கண்டு பதறியடித்தபடி ஓடினார்கள்.

அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் அங்குள்ள பாம்பு பிடிக்கும் வாலிபரான சூரிய கீர்த்தி என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக விரைந்து சென்று 13 அடி நீள கருநாக பாம்பை மிகவும் லாவகமாக கையால் பிடித்தார்.

பலமுறை பாம்பு அவரது கைகளில் இருந்து நழுவியது. இருந்தாலும் அவர் விடாப்பிடியாக பாம்பை பிடித்தார். அவர் கைகளில் பிடித்து வைத்திருந்த பாம்பு பட மெடுத்து ஆடியபடி காணப்பட்டது. இதை அந்த பகுதி மக்கள் வேடிக்கை பார்த்தனர்.

பின்னர் சூரிய கீர்த்தி அந்த பாம்பை காவிரி ஆறு பிறப்பிடமான பாகமண்டலா பகுதிக்கு கொண்டு சென்று அங்குள்ள ஏரி அருகே காட்டில் விட்டார். 

Tags:    

Similar News