செய்திகள்
மந்திரிசபை விரிவாக்கத்திற்கு முன்னதாக பாஜக எம்பிக்களுடன் மோடி சந்திப்பு

மத்திய மந்திரிசபை விரிவாக்கம்- இன்று 43 பேர் பதவியேற்கிறார்கள்

Published On 2021-07-07 10:18 GMT   |   Update On 2021-07-07 11:19 GMT
மத்திய மந்திரி சபை விரிவாக்கத்திற்கு முன்னதாக, சுகாதாரத்துறை மந்திரி உள்ளிட்ட முக்கிய மந்திரிகள் ராஜினாமா செய்துள்ளனர்.
புதுடெல்லி:

கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்றதையடுத்து இரண்டாவது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் அமைந்துள்ளது. ஆட்சி அமைத்த பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து மத்திய மந்திரி சபை இன்று மாற்றியமைக்கப்பட உள்ளது. இன்று மாலை 6 மணிக்கு  மந்திரி சபை விரிவாக்கம் மற்றும் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. மந்திரிசபை விரிவாக்கத்திற்கு முன்னதாக பாஜக எம்பிக்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

மத்திய மந்திரிகளாக 43 பேர் இன்று பதவியேற்க உள்ளனர். இது தொடர்பான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இன்று மந்திரிகளாக பதவியேற்க உள்ள எம்.பிக்கள் பிரதமர் இல்லத்திற்கு வருகை தந்து அவருடன் ஆலோசனை நடத்தினர்.

இதற்கிடையே, மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் கங்குவார், கர்நாடகாவை சேர்ந்தவரும் மத்திய ரசாயனத்துறை மந்திரியுமான சதானந்த கவுடா, சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ வர்தன், பபுல் சுப்ரியோ உள்ளிட்ட மந்திரிகள் ராஜினாமா செய்துள்ளனர். 
Tags:    

Similar News