செய்திகள்
தங்க முகக்கவசம்

ரூ. 5 லட்சத்தில் தங்க முகக்கவசம் அணிந்து உலா வரும் கான்பூர் சாமியார்

Published On 2021-07-02 09:34 GMT   |   Update On 2021-07-02 09:34 GMT
கான்பூரில் மனோஜ் செங்கார் என்ற தங்க பாபா தனது கழுத்தில் எப்போதும் 2 கிலோ நகைகளை அணிந்திருப்பார்.

கான்பூர்:

கொரோனா வைரஸ் பரவிலில் இருந்து தற்காத்து கொள்ள மக்கள் அனைவரும் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த சாமியார் ஒருவர் ரூ.5 லட்சம் மதிப்பில் தங்க முகக்கவசத்தை அணிந்து உலா வருகிறார்.

கான்பூரைச் சேர்ந்தவர் மனோஜ் செங்கர். இவரை அப்பகுதி மக்கள் ‘தங்க பாபா’ என்று அழைக்கிறார்கள். இவர் ரூ.5 லட்சத்தில் தங்க முகக் கவசத்தை செய்து பயன்படுத்தி வருகிறார். இதற்கு ‘ஷிவ் ஸ்வர்ன் ர‌ஷக் கொரோனா மாஸ்க்‘ என்று பெயரிட்டுள்ளார்.

தங்க முகக் கவசத்தை அணிவதற்கு முன்பு அதற்கு பூஜை செய்து மந்திரத்தை ஓதியபின் அதை முகத்தில் அணிந்து கொள்கிறார்.


இதுகுறித்து தங்க பாபா கூறும்போது, மக்கள் தங்களது முகக்கவசங்களை சரியாக அணிவதில்லை. கொரோனா 2-வது அலை கொடியது. இந்த தங்க முகக்கவசம் 3 அடுக்குகளை கொண்டது. 3 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும் என்றார்.

மேலும் தங்க முகக்கவசம் அணிந்து கொண்டு இருப்பதால் கொரோனா தனது அருகில் வராது என்றும் கூறினார்.

மனோஜ் செங்கார் என்ற தங்க பாபா தனது கழுத்தில் எப்போதும் 2 கிலோ நகைகளை அணிந்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News