செய்திகள்
கோப்புப்படம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சி.ஏ. தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Published On 2021-06-30 22:07 GMT   |   Update On 2021-06-30 22:07 GMT
ஊரடங்கால் சி.ஏ. தேர்வை எழுத முடியாமல் போனவர்களும் பின்னர் நடைபெறும் தேர்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

சி.ஏ. தேர்வை தள்ளிவைக்கவும், தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கவும், தேர்வு மையங்களை அதிகரிக்கவும் கோரும் மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

இந்த வழக்கில் நேற்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் அல்லது அவர்களின் குடும்பத்தில் யாரேனும் இத்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அதற்குரிய மருத்துவ சான்றிதழை அளித்து தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு பெற உரிமையுண்டு. இவ்வாறு தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்களை, கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு நடத்தப்படும் தேர்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். சி.ஏ. தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள் கொரோனா பாதிப்பு மருத்துவ சான்றிதழை மட்டும் அளித்தால் போதுமானது. ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கை தேவையில்லை.

ஊரடங்கால் சி.ஏ. தேர்வை எழுத முடியாமல் போனவர்களும் பின்னர் நடைபெறும் தேர்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்.

சி.ஏ. தேர்வு எழுதும்போது கொரோனா பாதிப்புக்கு உள்ளாக நேரிடும் தேர்வர்களுக்கும் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், இதை அட்டெம்ப்ட் கணக்கில் கொள்ளக்கூடாது.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News