செய்திகள்
முதல் மந்திரி மனோகர் லால் கட்டார்

அரியானாவில் முதல் மந்திரிக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது

Published On 2021-06-20 22:18 GMT   |   Update On 2021-06-20 22:18 GMT
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி, அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
பஞ்ச்குலா:

அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் அமைக்கப்பட்டு இருந்த சுகாதார மையத்தை முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் நேற்று திறந்து வைத்தார்.

முன்னதாக, அந்தப் பகுதிக்கு அவர் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு விவசாயிகள் சிலர் கருப்புக் கொடியுடன் அங்கு திரண்டனர். முதல் மந்திரிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டுவதற்காக வந்திருந்த அவர்களை போலீசார் கலைந்து போக வலியுறுத்தினர். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த விவசாயிகள் அங்கேயே சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அந்த விவசாயிகளை போலீசார் குண்டுகட்டாக வாகனங்களில் ஏற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதன்பின், கைது செய்யப்பட்ட அவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். 

அமைதியான முறையில் போராட்டம் நடத்த முயன்ற தங்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர் என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
Tags:    

Similar News