செய்திகள்
செம்மரக்கட்டைகள்

திருப்பதி, கடப்பாவில் செம்மரம் கடத்திய 8 பேர் கைது

Published On 2021-06-15 09:29 GMT   |   Update On 2021-06-15 09:29 GMT
கடப்பா மற்றும் திருப்பதியில் இருவேறு இடங்களில் 8 பேரை போலீசார் கைது செய்து மொத்தம் 36 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
திருமலை:

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ரெயில்வே கொடுரு மற்றும் ஒண்டிமிட்டா அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட கடப்பா மாவடடம் ஒண்டிமிட்டாவை சேர்ந்த ரவிக்குமார்(வயது 38), சீனிவாஸ்(35), முரளி(32), சங்கரா(37), ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து 27 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் திருப்பதி கரக்கம்பாடி அருகே வனப்பகுதியில் செம்மரக்கட்டைகளை கடத்த முயன்ற தோட்லமிட்டா கிராமத்தை சேர்ந்த வெமுலா நாராயணா(55), வெமுலாநானி (21), சுப்ரமண்யம் (47) ஆகிய 4 பேரை செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிபடை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 9 செம்மரம், 2 பைக் பறிமுதல் செய்யப்பட்டதாக டி.எஸ்.பி. முரளிதர் தெரிவித்தார்.

கடப்பா மற்றும் திருப்பதியில் இருவேறு இடங்களில் 8 பேரை போலீசார் கைது செய்து மொத்தம் 36 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

கடப்பாவில் கைது செய்யப்பட்டவர்கள் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உள்ளதாக எஸ்.பி. அன்புராஜன் தெரிவித்தார்.



Tags:    

Similar News