செய்திகள்
தடுப்பூசி

டிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்கப்படும் -மத்திய மந்திரி தகவல்

Published On 2021-05-28 10:17 GMT   |   Update On 2021-05-28 10:17 GMT
தடுப்பூசி திட்டம் குறித்து ராகுல் காந்தி அக்கறை கொண்டிருந்தால், காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்கள் மீது கவனம் செலுத்தவேண்டும் என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறி உள்ளார்.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பாதிப்புகள் மற்றும் மரணங்களுக்கு பிரதமர் மோடி பொறுப்பு என்றும், கொரோனாவின் தீவிரத்தை பிரதமர் புரிந்துகொள்ளவில்லை என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். 

மேலும், 130 கோடி மக்கள் கொண்ட நாட்டில், வெறும் 3 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.



ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டுக்கு மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது:-

இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி இந்த ஆண்டுக்குள் (2021) நிறைவடையும். தடுப்பூசி திட்டம் குறித்து ராகுல் காந்தி அக்கறை கொண்டிருந்தால், காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்கள் மீது அவர் கவனம் செலுத்தவேண்டும். அந்த மாநிலங்களில் மே 1 முதல் 18-44 வயதுடைய பயனாகளுக்கு வழங்கப்பட்ட ஒதுக்கீட்டை அவர்கள் எடுக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News