செய்திகள்
பினராயி விஜயன்

கேரள முதல் மந்திரியாக பினராயி விஜயன் நாளை மறுதினம் பதவி ஏற்கிறார்

Published On 2021-05-17 21:48 GMT   |   Update On 2021-05-17 22:34 GMT
கேரள மாநில சட்டசபைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி நடந்தது. வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ம் தேதி நடைபெற்றது.
திருவனந்தபுரம்:

கேரள மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ம் தேதி நடைபெற்றது. இதில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி மாபெரும் வெற்றி பெற்றது.

இதையடுத்து, மந்திரி சபை அமைப்பது குறித்த ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் விஜயராகவன் கூறியதாவது:

கேரள மாநில முதல் மந்திரியாக பினராயி விஜயன் வரும் 20-ம் தேதி பதவி ஏற்கிறார். அவருடன் 20 மந்திரிகளும் பதவி ஏற்க உள்ளனர்.

புதிய மந்திரி சபையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 12 இடங்களும், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 4 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

கேரள காங்கிரஸ் (எம்), ஜனதா தளம் (எஸ்) மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 இடங்கள் சுழற்சி முறையில் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என தெரிவித்தார்.
Tags:    

Similar News