செய்திகள்
ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்

ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மூலம் தமிழகத்துக்கு 151 டன் ஆக்சிஜன் வினியோகம்

Published On 2021-05-17 00:09 GMT   |   Update On 2021-05-17 00:09 GMT
கொரோனா நோயாளிகளுக்கு உயிர்மூச்சு அளிக்கும் ஆக்சிஜனை நாடு முழுவதும் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் எடுத்துச் சென்று வருகின்றன
புதுடெல்லி:

கொரோனா நோயாளிகளுக்கு உயிர்மூச்சு அளிக்கும் ஆக்சிஜனை நாடு முழுவதும் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் எடுத்துச் சென்று வருகின்றன.அந்தவகையில், கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல், பல்வேறு மாநிலங்களுக்கு 590 டேங்கர்கள் மூலம் 9 ஆயிரத்து 440 டன்னுக்கு அதிகமான திரவ மருத்துவ ஆக்சிஜன் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு 151 டன் ஆக்சிஜன் கிடைத்து இருக்கிறது.

இதுவரை சுமார் 150 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தங்கள் பயணத்தை முடித்துள்ளன. 12 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், 55 டேங்கர்களில் 970 டன்னுக்கு அதிகமான ஆக்சிஜனை எடுத்துச் சென்றன. தேசிய தலைநகரப் பகுதிக்கு மட்டும் 5 ஆயிரம் டன்னுக்கும் அதிகமான ஆக்சிஜன், ரெயில்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. கடந்த சில நாட்களில் மட்டும் நாடு முழுவதும் தினமும் 800 டன் ஆக்சிஜனை இந்த ரெயில்கள் வினியோகம் செய்திருக்கின்றன.

தென்னிந்திய மாநிலங்களுக்கு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பெரிதும் கைகொடுத்திருக்கின்றன. கேரள மாநிலத்துக்கான முதலாவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில் 118 டன் ஆக்சிஜனை கொண்டு சென்றது. மாநிலங்களைப் பொறுத்தவரை அதிகபட்சமாக உத்தரபிரதேசம் சுமார் 2 ஆயிரத்து 525 டன் ஆக்சிஜனை ரெயில்கள் மூலம் பெற்றிருக்கிறது.

ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News