செய்திகள்
கோப்புப்படம்

மாநிலங்களுக்கு 20.28 கோடி தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது: மத்திய அரசு

Published On 2021-05-16 13:20 GMT   |   Update On 2021-05-16 13:20 GMT
மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கிய தடுப்பூசிகள் எவ்வளவு? என்பதை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் முதன்முதலாக கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வந்தது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியார்கள், முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. கொரோனா தடுப்பூசியின் 2-வது திட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும், 45 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு செலுத்தும் பணி தொடங்கியது.

கடந்த 1-ந்தேதியில் இருந்து 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது.

ஆனால், 45 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் இலவசமாக மத்திய அரசு தடுப்பூசி வழங்கியது. 18 முதல் 45 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மாநில அரசுகளே கொள்முதல் செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்தது.



இந்த நிலையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 20.28 கோடி தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்திற்கு 85,59,540 தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News