செய்திகள்
பினராயி விஜயன்

கேரளாவில் இன்று 34,694 பேருக்கு கொரோனா: ஊரடங்கு 23-ந்தேதி வரை நீட்டிப்பு- உ.பி.யில் 15,747 பேர் பாதிப்பு

Published On 2021-05-14 13:37 GMT   |   Update On 2021-05-14 13:37 GMT
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,694 உள்ள நிலையில், உத்தர பிரதேசத்தில் 15,747 ஆக உள்ளது.
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34,694 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 93 பேர் உயிரிழந்துள்ளனர். 31,319 பேர் குணமடைந்துள்ளனர் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும், இதுவரை 6243 பேர் உயிரிழந்ததாகவும், 16,36,790 பேர் குணமடைந்துள்ளர் என்றும், 1,31,375  மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாசிட்டிவ் சதவீதம் தொடர்ந்து உயர்வில் இருப்பதால் முழு ஊரடங்கை மே 23-ந்தேதி வரை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளதாகவும், திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்களில் மூன்றடக்கு ஊரடங்க அமல்படுத்தப்படும் என்றார்.



உத்தர பிரதேச மாநிலத்தில் 15,747 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 26,179 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 312 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 13,85,855 பேர் குணமடைந்துள்ளனர். 16,957 பேர் உயிரிழந்துள்ளனர். 1,93,815 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Tags:    

Similar News