செய்திகள்
எடியூரப்பா

கர்நாடகத்தில் முழு ஊரடங்கை அறிவித்தார் முதல்-மந்திரி எடியூரப்பா

Published On 2021-05-07 14:45 GMT   |   Update On 2021-05-07 14:45 GMT
கர்நாடக மாநிலத்தில் பாதி அளவுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் புதிய உச்சமாக நேற்று முன்தினம் ஒரே நாளில் 50 ஆயிரத்து 112 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர்.

கொரோனா 2-வது அலையின் பிடியில் கர்நாடகம் சிக்கியுள்ளது. மாநிலத்தில் தினசரி பாதிப்பும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து கொண்டே செல்கின்றன. கொரோனா பரவலை தடுக்க கர்நாடக அரசு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. 



இந்நிலையில் கர்நாடகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வந்த நிலையில் முதலமைச்சர் எடியூரப்பா ஊரடங்கு குறித்த தகவலை வெளியீட்டுள்ளார்.

ஊரடங்கு தொடர்பாக அவர் கூறியதாவது:-

கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு வெற்றிகரமாக இல்லை. எனவே மே 10 காலை 6 மணி முதல் மே 24 ஆம் தேதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கு விதிக்கப்படும். அனைத்து ஓட்டல்களும், பப்களும், பார்களும் மூடப்பட்டிருக்கும். காலை 6-10 மணி வரை உணவகங்கள், இறைச்சி கடைகள் மற்றும் காய்கறி கடைகள் இயங்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News