செய்திகள்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

மேற்கு வங்க மாநிலத்தில் போலீஸ் வாகனம் மீது தாக்குதல்

Published On 2021-05-07 05:26 GMT   |   Update On 2021-05-07 07:08 GMT
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் போலீஸ் வாகனத்தை தாக்கியதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.


சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான தினத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் கடும் கலவரம் வெடித்தது. எதிர்கட்சியை சேர்ந்த பலர் இந்த கலவரத்தில் காயமுற்றனர். மேலும் கட்சி அலுவலகங்கள், வீடுகள் மற்றும் கடைகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கூட்டத்தினர் காவல் துறை வாகனத்தை அடித்து நொறுக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. தேர்தல் முடிவுகளை தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபடுவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.



வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், அது 2021 ஜனவரி மாத வாக்கில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் ஒடிசா மாநிலத்தில் இளைஞர் கொல்லப்பட்ட விவகாரத்தில் போலீசார் மற்றும் உள்ளூர் மக்களிடையே மோதல் ஏற்பட்டது. அந்த வகையில் வைரல் வீடியோ சமீபத்தில் எடுக்கப்படவில்லை என உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News