செய்திகள்
ஸ்டெர்லைட் ஆலை

ஆக்சிஜன் தயாரிப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளிக்கலாம் -மத்திய அரசு

Published On 2021-04-22 08:04 GMT   |   Update On 2021-04-22 08:04 GMT
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் இடைக்கால மனு தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசு அவகாசம் கேட்டது.
புதுடெல்லி:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள உற்பத்திக்கூடத்தில் ஆக்சிஜனை தயாரித்து இலவசமாக வழங்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆக்சிஜன் தயாரிப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளிக்கலாம் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் பதில் அளிப்பதற்கு அவகாசம் அளிக்கும்படி தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து, வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 



இதற்கிடையே இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்பதால், ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், செயலாளரும் தெளிவுபடுத்தி இருப்பதாகவும் வைகோ கூறி உள்ளார்.
Tags:    

Similar News