செய்திகள்
அஸ்லாம் ஷேக்

மந்திரிகள் பிரசாரம் செய்யும் இடங்களில் கொரோனா அலை இல்லை: இங்கே எப்படி?- ஆய்வு நடத்த மராட்டியம் கோரிக்கை

Published On 2021-04-11 13:06 GMT   |   Update On 2021-04-11 13:06 GMT
இந்தியாவிலேயே குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு இருப்பதால், ஆய்வு நடத்த அம்மாநில அரசு கெட்டுக்கொண்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று மிகத் தீவிரமாக அதிகரித்துக் கொண்டு வரும் வேலையில்தான் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்தது. மேற்கு வங்காளத்தில் நான்கு கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இன்னும் நான்கு கட்ட தேர்தல் நடைபெற இருக்கிறது.

தேர்தல் பிரசாரத்தில் ஏராளமான மாநில அமைச்சர்களும், மத்திய மந்திரிகளும் ஈடுபட்டனர். அவர்கள் பேசிய பொதுக்கூட்டத்திற்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடினர். சில அமைச்சர்கள் சாலை பேரணி மேற்கொண்டனர். அப்போது அவர்களுடன் ஏராளமானோர் நடந்து சென்றனர்.

தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிவேகமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

எங்கள் மாநிலத்தில் மட்டும் வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனால் அமைச்சர்கள் ஆயிரக்கணக்கானோருக்கு மத்தியில் பிரசாரம் செய்த மாநிலங்களில் மட்டும் கொரோனா எப்படி கூடாமல் உள்ளது? என மகாராஷ்டிர மாநில அரசுக்கு சந்தேகம் எழும்பியுள்ளது.

இதனால் கொரோனா ஆய்வுக்குழுவிடம் இதுகுறித்து ஆய்வு நடத்த கேட்டுக்கொண்டுள்ளதாக மகாராஷ்டிரா மாநில மந்திரி அஸ்லாம் ஷேக் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News