செய்திகள்
கோப்புபடம்

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பற்றி சமூக வலைதளத்தில் போலி செய்தி பரப்பினால் கடும் நடவடிக்கை

Published On 2021-03-12 11:01 GMT   |   Update On 2021-03-12 11:01 GMT
வாக்குப்பதிவு எந்திரத்தின் நம்பகத்தன்மை பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பினால் சம்பந்தப்பட்ட நபர் மீது போலீசில் புகார் செய்து வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையம் எச்சரித்துள்ளது.
புதுடெல்லி:

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

இந்நிலையில் தேர்தல் விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதனால் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதற்கிடையே மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்து வாட்ஸ்-அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் போலி செய்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாக்குப்பதிவு எந்திரத்தின் நம்பகத்தன்மை பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பினால் சம்பந்தப்பட்ட நபர் மீது போலீசில் புகார் செய்து வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையம் எச்சரித்துள்ளது.

Tags:    

Similar News