செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

யுபிஎஸ்சி தேர்வு எழுதாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு இல்லை- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Published On 2021-02-24 09:35 GMT   |   Update On 2021-02-24 09:35 GMT
கொரோனா காலத்தில் யு.பி.எஸ்.சி. தேர்வு எழுத தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

யு.பி.எஸ்.சி. எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் இந்திய ஆட்சி பணியான ஐ.ஏ.எஸ்., இந்திய வெளியுறவுப் பணியான ஐ.எப்.எஸ்., போலீஸ் பணியான ஐ.பி.எஸ், சிவில் சர்வீஸ் தேர்வை நடத்துகிறது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த தேர்வு குறிப்பிட்ட தேதிக்கு பதிலாக வேறு தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. கடந்த அக்டோபர் 4-ந் தேதி இந்த தேர்வு நடந்தது.

இதையடுத்து இந்த தேர்வை எழுத முடியாமல் போனவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் கொரோனா காரணமாக கடைசி தேர்வு எழுத முடியாமல் போனவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கலாம். மீதம் உள்ளவர்களுக்கும், வயதை கடந்தவர்களுக்கும், வேறு காரணங்களுக்காக தேர்வு எழுதாமல் விட்டவர்களுக்காகவும் எந்த தயவும் அளிக்க முடியாது என்று தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு இந்த மனு மீதான தீர்ப்பை இன்று வழங்கியது. அதில் யு.பி.எஸ்.சி. தேர்வு எழுத கூடுதலாக வாய்ப்பு வழங்க முடியாது. கொரோனா காலத்தில் தேர்வு எழுத தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News