செய்திகள்
தேர்தல் ஆணையம்

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தபால் வாக்களிக்க பரிசீலனை- தலைமை தேர்தல் ஆணையர் தகவல்

Published On 2021-02-24 07:23 GMT   |   Update On 2021-02-24 07:23 GMT
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், தேர்தலில் ஓட்டுபோட தபால் வாக்கு முறையை அறிமுகப்படுத்துவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

புதுடெல்லி:

இந்தியாவில் இருந்து வேலைக்காகவும், பிற பணிகளுக்காகவும் ஏராளமானோர் வெளிநாடுகளில் தங்கி உள்ளனர்.

இந்தியாவில் பொது தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் நடைபெறும் போது வெளிநாடுகளில் தங்கியிருப்போர் தங்களின் வாக்குகளை பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது.

அவர்களும் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என வெளிநாடு வாழ் இந்தியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

நீண்ட காலமாக இருந்து வந்த இக்கோரிக்கையை நிறைவேற்றக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் சம்சீர்வயலில் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு மீதான விசாரணை நடந்து வந்த நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது.

அந்த அறிக்கையில் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், தேர்தலில் ஓட்டுபோட தபால் வாக்கு முறையை அறிமுகப்படுத்துவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

இது தொடர்பாக சட்டத்துறை மற்றும் வெளியுறவு துறை அமைச்சகங்களுடன் ஆலோசித்து வருகிறோம் என்றும் கூறியிருந்தது.

இந்திய தேர்தல் கமி‌ஷனின் இந்த நடவடிக்கை நம்பிக்கை அளிப்பதாக சம்சீர்வயலில் தெரிவித்து உள்ளார். இப்பிரச்சினை தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து பேசியதாகவும் கூறியிருந்தார்.

வருகிற தேர்தலில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News