செய்திகள்
கொதிக்கும் எண்ணெயில் வடை சுடும் பக்தர்

கொதிக்கும் எண்ணெயில் கைகளால் பலகாரங்களை சுட்டு மெய்சிலிர்க்க வைத்த அய்யப்ப பக்தர்கள்

Published On 2021-01-15 11:39 GMT   |   Update On 2021-01-15 11:39 GMT
சபரிமலை அய்யப்பன் கோவில் மகர ஜோதி விழாவை முன்னிட்டு கர்நாடக மாநிலம் குடிகிரி கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவில் மகரஜோதி விழா பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் பொங்கல் தினத்தனற்று பொன்னம்பலமேட்டில் காட்சி தரும் மகரஜோதியை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள்.

இந்த முறை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. பெரும்பாலான பக்தர்கள் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே தரிசனம் செய்து கொண்டனர்.



மாலை அணிவித்து விரதம் இருந்த கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தின் குடிகிரி கிராம பக்தர்கள் நேற்று சிறப்பு பூஜை செய்தனர். அப்போது தீ மிதித்தும், கொதிக்கும் எண்ணெயில் கைகளால் பலாகாரம் சுட்டும் தங்களது நேர்த்தி கடனை செய்தனர்.
Tags:    

Similar News