செய்திகள்
ராஜ்கோட் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி

குஜராத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

Published On 2020-12-31 07:37 GMT   |   Update On 2020-12-31 07:37 GMT
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.
ராஜ்கோட்:
 
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. 201 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய உள்ள இந்த மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடி காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி பேசினார்.

அப்போது, உலக ஆரோக்கியத்தின் நரம்பு மையமாக இந்தியா உருவாகியிருப்பதாக அவர் குறிப்பிட்டார். மேலும், எதிர்கால ஆரோக்கியத்தில் இந்தியா மிக முக்கிய பங்கு வகிக்கும் என்றும், நமது கவனம் எப்போதும் மனிதநேயத்தில் இருந்தது என்றும் கூறினார்.

ராஜ்கோட் எய்ம்ஸ் மருத்துவமனை ரூ .1,195 கோடி செலவில் கட்டப்படுகிறது. கட்டுமான பணிகள் 2022 மத்தியில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News