செய்திகள்
தேவேந்திர பட்னாவிஸ்

அயோத்தி போராட்டம் இந்துக்களின் மனவலிமையை அதிகரிக்க செய்தது: தேவேந்திர பட்னாவிஸ்

Published On 2020-12-24 03:54 GMT   |   Update On 2020-12-24 04:40 GMT
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பல ஆண்டுகளாக போராட்டம் நடந்தது. அந்த போராட்டம் இந்துகளின் மனவலிமையை அதிகரிக்க வைத்து உள்ளது என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
மும்பை :

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இந்துக்கள் நடத்திய போராட்டம் குறித்து மாநில பா.ஜனதா துணை தலைவர் மாதவ் பண்டாரி எழுதிய புத்தகத்தை சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்டார். அப்போது அவர் அயோத்தி போராட்டம் இந்துக்களின் மனவலிமையை அதிகரிக்க வைத்து உள்ளது என கூறினார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது:-

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பல ஆண்டுகளாக போராட்டம் நடந்தது. அந்த போராட்டம் இந்துகளின் மனவலிமையை அதிகரிக்க வைத்து உள்ளது.

அயோத்தில் இருந்த ராமர் கோவிலை வெளியில் இருந்து நமது நாட்டுக்கு படையெடுத்து வந்தவர்கள் இடித்தார்கள். அந்த தோல்வி மனப்பான்மையில் இருந்து வெளியே வர இந்துகளுக்கு பல ஆண்டுகள் தேவைப்பட்டது. அந்த மனப்பான்மையை ஒழிக்கவும், இந்துக்களை எழுச்சி பெற வைக்கவும் தான் அயோத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News