செய்திகள்
பாஜக தலைவர் ஜே.பி.நட்டா

பாஜகவினர் மீது தாக்குதல்- மேற்கு வங்க தலைமைச் செயலருக்கு உள்துறை அமைச்சகம் சம்மன்

Published On 2020-12-11 08:16 GMT   |   Update On 2020-12-11 08:16 GMT
மேற்கு வங்கத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து விளக்கம் அளிக்கும்படி தலைமைச் செயலருக்கு உள்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பி உள்ளது.
புதுடெல்லி:

மேற்கு வங்க மாநிலம் டயமண்ட் ஹார்பர் தொகுதிக்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சென்றபோது, அவருடன் சென்ற கார்கள் மீது ஒரு கும்பல் திடீர் தாக்குதல் நடத்தியது. கற்களை வீசி தாக்கியதில் வாகனங்கள் சேதமடைந்தன. பாஜக முக்கிய தலைவர்களான முகுல் ராய், கைலாஷ் விஜய்வர்கியா மற்றும் சிலர் காயமடைந்தனர். 

இந்த தாக்குதலுக்கு ஜே.பி.நட்டா கடும் கண்டனம் தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் மம்தாவின் ஆட்சி முடிவுக்கு வரப்போவதாகவும் எச்சரித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் கொல்லப்பட்டதாக பாஜக மேலிட தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக மத்திய அரசுக்கு மேற்கு வங்க ஆளுநர் அறிக்கை அனுப்பியிருந்தார். அதில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து, மேற்கு வங்கத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து விளக்கம் அளிக்கும்படி மாநில தலைமைச் செயலர் மற்றும் டிஜிபி ஆகியோருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பி உள்ளது. 
Tags:    

Similar News