செய்திகள்
கோப்பு படம்

இந்திய கடற்படை தினம் - கடற்படையினருக்கு தலைவர்கள் வாழ்த்து

Published On 2020-12-04 11:27 GMT   |   Update On 2020-12-04 11:27 GMT
இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படையினருக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:

1971 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நடந்தது. இந்த போரின் போது 1971 டிசம்பர் 4-ம் தேதி அதிகாலை பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்திற்குள் நுழைந்த இந்திய கடற்படையினர் அங்கிருந்த போர்கப்பல்களை தாக்கி அழித்தனர். 

1971 போரில் இந்தியா வெற்றிபெற கடற்படையினரின் அதிரடி தாக்குதல் முக்கிய காரணமாகும். இதையடுத்து, டிசம்பர் 4-ம் தேதி இந்திய கடற்படை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  
  
இந்நிலையில், இந்திய கடற்படை தினம் இன்று கொண்டாடப்ட்டு வருகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னம் அலங்கரித்து வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

போர் நினைவுச் சின்னத்தில் கடற்படை தளபதி கரம்பீர் சிங் மற்றும் கடற்படை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

கடற்படை தினத்தையொட்டி கடற்படை வீரர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

கடற்படை தினத்தையொட்டி பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,

வீரமிக்க நமது கடற்படை வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் கடற்படை தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய கடற்படை அச்சமின்றி நமது கடல் எல்லைகளை பாதுகாப்பது மட்டுமின்றி தேவைப்படும் காலங்களில் மனிதாபிமான உதவிகளை செய்துவருகிறது. பல நூற்றாண்டுகளாக இந்தியாவின் வளமான கடற்பாரம்பரியத்தை நாங்கள் நினைவில் 
கொள்கிறோம்.

என்றார்.

குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

கடற்படை தினத்தில் தற்போதைய, ஓய்வு பெற்ற கடற்படையினருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நமது கடல் எல்லைகளை பாதுகாப்பதில், வர்த்தக பாதைகளை பாதுகாப்பதில், மற்றும் அவசர காலங்களில் உதவிகளை வழங்குவதில் உங்கள் அர்ப்பணிப்பு குறித்து நாடு பெருமிதம் கொள்கிறது. நீங்கள் எப்பொழுதும் தண்ணீரை ஆள வேண்டும். ஜெய் ஹிந்த்!

என்றார்.

காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளும் அரசியல் தலைவர்களும் கடற்படை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News