முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய துணைத் தலைவர் மவுலானா கல்பே சாதிக் மறைவையடுத்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய துணைத் தலைவர் மறைவு- பிரதமர், ராணுவ மந்திரி இரங்கல்
பதிவு: நவம்பர் 25, 2020 14:37
மவுலானா கல்பே சாதிக்
புதுடெல்லி:
அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய துணைத்தலைவர் மவுலானா கல்பே சாதிக் (வயது 83) நேற்று இரவு காலமானார். பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு லக்னோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.