உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 குழந்தைகள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.
6 குழந்தைகள் உள்பட 14 பேரின் உயிரைக் குடித்த கோர விபத்து
பதிவு: நவம்பர் 20, 2020 08:29
விபத்தில் சிக்கிய கார்
பிரதாப்கர்:
உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் அருகே நேற்று இரவு லாரி மீது கார் மோதி விபத்துக்குள்னது. பிரயாக்ராஜ்-லக்னோ நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. அதிவேகமாக சென்று மோதியதால், காரின் முன்பகுதி கடுமையாக சிதைந்து, லாரியில் சிக்கிக்கொண்டது.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். கேஸ் கட்டர் உதவியுடன் காரின் பாகங்களை வெட்டி எடுத்து உள்ளே இருந்தவர்களை சடலமாக மீட்டனர். இந்த கோர விபத்தில் 6 குழந்தைகள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.
விபத்தில் உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Related Tags :