செய்திகள்
அயோத்தி தீப உற்சவம்

தீபாவளி கொண்டாட்டங்கள் - 5.8 லட்சம் தீபங்களுடன் ஜொலித்த அயோத்தி

Published On 2020-11-13 17:20 GMT   |   Update On 2020-11-13 17:20 GMT
தீப உற்சவத்தை முன்னிட்டு அயோத்தியின் சரயு நதிக்கரையில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டது. நகரமே வண்ண விளக்குகளால் ஜொலித்துவருகிறது.
லக்னோ:

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை (அக்டோபர் 14 சனிக்கிழமை) கொண்டாடப்படவுள்ளது. 

தீபாவளியை முன்னிட்டு உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில்  நடைபெறும் தீபஉற்சவம் நிகழ்ச்சியில் சரயு நதிக்கரையில் அகல் விளக்குகளை ஏற்றும் நிகழ்வு மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு தீப உற்சவம் இன்று நடைபெற்று வருகிறது. 

தீப உற்சவத்தையொட்டி சரயு நதிக்கரையில் 5 லட்சத்து 84 ஆயிரத்து 572 அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. இது கின்னஸ் சாதனையாக மாறியுள்ளது. இதனால், அயோத்தி நகரமே ஜொலித்து வருகிறது. 

சரயு நதிக்கரையில் கடந்த ஆண்டு தீப உற்சவத்தின்போது 5.50 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டது. 2018 ஆம் ஆண்டு 3 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டன.

இந்த ஆண்டு நடைபெற்று வரும் தீப உற்சவ நிகழ்ச்சியில் உத்தரபிரதேச முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். 
Tags:    

Similar News