செய்திகள்
பிரதமர் மோடி

இன்று ஆயுர்வேத தினம்... இரண்டு ஆயுர்வேத நிறுவனங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர்

Published On 2020-11-13 04:48 GMT   |   Update On 2020-11-13 04:48 GMT
குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள ஆயுர்வேத கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஜெய்ப்பூரின் தேசிய ஆயுர்வேத நிறுவனம் ஆகியவற்றை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார்.
புதுடெல்லி:

தன்வந்திரி ஜெயந்தியான நவம்பர் 13ம் தேதி தேசிய ஆயுர்வேத தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. 2016ம் ஆண்டு முதல் மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஆயுர்வேத தினத்தை கொண்டாடி வருகிறது. அவ்வகையில் இன்று ஐந்தாவது ஆயுர்வேத தினம் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஆயுர்வேத தினத்திற்கு வாழ்த்து தெரிவிப்பதுடன், இந்த சிறப்பு தினத்தில் ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் ஆயுர்வேத நிறுவனங்களை துவக்கி வைக்க உள்ளதாக மோடி கூறி உள்ளார்.

ஐந்தாவது ஆயுர்வேத தினத்தில் எதிர்கால ஆயத்த ஆயுர்வேத நிறுவனங்களான குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள ஆயுர்வேத கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஜெய்ப்பூரின் தேசிய ஆயுர்வேத நிறுவனம் ஆகியவற்றை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார். இரண்டு நிறுவனங்களும் நாட்டின் ஆயுர்வேதத்தின் முதன்மை நிறுவனங்கள் என அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News