செய்திகள்
போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள்

‘கல்யாண கர்நாடகா’ தனி மாநிலம் கேட்டு கலபுரகியில் போராட்டம்

Published On 2020-11-01 09:16 GMT   |   Update On 2020-11-01 09:16 GMT
கல்யாண கர்நாடகா தனி மாநில கோரிக்கையுடன் கலபுரகியில் போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கலபுரகி:

கர்நாடக மாநிலத்தில் இருந்து பீதர், கலபுரகி, பெல்லாரி, ரெய்ச்சூர், கொப்பள், யாத்கிர் ஆகிய மாவட்டங்களைப் பிரித்து கல்யாண கர்நாடக மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாநில உதய தினமான நவம்பர் 1ம் தேதி கலபுரகியில் கல்யாண-கர்நாடகா என்ற பெயரில் தனிமாநில கொடியேற்றி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் கர்நாடக மாநில உதய தினமான இன்று கலபுலகியில் பிரத்தியேக கல்யாண கர்நாடக ஹொரட்டா சமிதி என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள், கல்யாண கர்நாடகா தனி மாநில கோரிக்கைக்காக போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர். 

பீதர், கலபுரகி, பெல்லாரி, ரெய்ச்சூர், கொப்பள், யாத்கிர் மாவட்டங்கள் இன்னும் வளர்ச்சி பெறவில்லை என்று போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.
Tags:    

Similar News